சவூதி அரேபிய தேசம் முழுவதும் இன்று விடுமுறை!

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் கடந்த 23/1/2015  (வெள்ளிக்கிழமை) வஃபாத்தானார்கள். இவர்களின் உடல் எந்த வித ஆரவாரமுமின்றி அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து சவூதி அரேபிய தேசம் முழுவதும் இன்று மன்னர் அப்துல்லாஹ் மீது உள்ள மரியாதையின் காரணமாகவும் அன்பின் காரணமாகவும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நாள் பொது விடுமுறை கடைபிடிக்கப்படுகிறது.

என்றும் பரபரப்புடன் காணப்படும் சவூதி அரேபிய நகரங்களான ஜித்தா, ரியாத், தமாம், மக்கா, மதினா ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மன்னரின் பிரிவை தாங்க முடியாமல் மன்னர் மீது உள்ள அன்பை வெளி காட்டும் விதமாக இந்த விடுமுறை அங்கு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close