அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் 265 வது படைப்பு! “வாழ்க்கை” (வீடியோ இணைப்பு)

உயிர்மூச்சு “பெண்டுலத்தின்”
ஊஞ்சலாட்டம்
காலச் சக்கர முட்களின் சுழற்சிக்
கடிகாரம்
#வாழ்க்கை#

உயிர் நீரை
உறிஞ்சி வளரும்
பயிர் தோட்டம் மரணப்
பயணத்தால் உயிரின் ஓட்டம்
#வாழ்க்கை#

பதிவு செய்யப்பட்ட விழியம்
பார்வையில் பட்டக் காட்சி
முடிவு செய்யப்பட்ட விதம்
முடிவில் காண்பதே நிஜம்
#வாழ்க்கை#

தாயின் வழியே வந்து
தரணி யெங்கும் பறந்து
நோயின் பிடியில் சிக்கி
நொந்து விலகும் உடலும்
#வாழ்க்கை#

பல்லுக்குள் அகப்பட்டப்
பக்குவமான நாக்காக
சொல்லுக்கும் செயலுக்கும்
சொந்தமுள்ள சோதனை
#வாழ்க்கை#

மாநிலம் புகழ்கூறும்
மாபெரும் மன்னராட்சி
ஓரசைவில் கெடுவந்தால்
ஒதுங்குவது மண்ணறையாச்சு!
#வாழ்க்கை#

கவியாக்கம்: அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

தொடர்ந்து பல தலைப்புகளில் பல்வேறு விதமான அருமையான கவிதைகளை எழுதி வரும் அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் 265 வது படைப்பு இந்த கவிதை. இவர்கள் மேன்மேலும் பல ஆக்கங்கள் படைத்திற மனதார வாழ்த்துகிறது அதிரை பிறை.

Advertisement

Close