Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் (படங்கள் இணைப்பு)

20150816004534

 

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக வருடா வருடம் பொதுமக்கள் பயனடையும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அதிரை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியோயில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. காலை 10 மணியளவில் துவங்கிய இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். இதில் கலந்துக்கொண்ட மக்களை அதிரை பிறை அனுகி விசாரித்ததில் இம்முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் கூறினர். இறுதியாக இம்முகாம் 1 மணியளவில் நிறைவடைந்தது.

 

படங்கள்: அஹமது இலியாஸ் (நமது செய்தியாளர்)