Adirai pirai
posts

அதிரை அருகே கருவேல மரத்தை அழிக்கும் பணியில் அண்ணா பல்கலைகழக மாணவர்கள்!(படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜாமடத்தில் உள்ள அண்ணா பல்கலை கழக மாணவர்கள் இன்று  கருவேல மரம் அழிக்கும் முயற்சியில் 10க்கும் மேற்பட்டோர் இடுப்பட்டு வருகின்றனர் .சில தினங்களுக்கு முன் தமிழக அரசு  கருவே மரத்தால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தது .

இதுகுறித்து அதிரை மாணவர் யாசர் நம்மிடம் கூறுகையில் :

புவி வெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. இதன் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை.இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளர முடியாது.

மேலும் காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

நிலத்தடி நீரை பால்படுத்தும் கருவேல மரங்களின் தாக்கம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது.

உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள் எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது என்றார்.

அமெரிக்காவில், கருவேல மரங்களை வளர்க்க விடுவதில்லை. அங்குள்ள தாவரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் கருவேல மரங்களுக்குத்தான்.

இந்தியாவில் கேரளாவை எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு கருவேல மரங்களை காணமுடியாது. அதேபோல் கருவேல மரங்களை அகற்றினால் தமிழகமும் கேரளாவின் பொலிவுக்கு திரும்பும்.

இதனிடையே கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் கருவேல மரங்களை வளர்க்க தொடங்கி விட்டனர். எந்த செலவும் இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன. கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர்.

தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் மரக்கன்றுகளை வளர்த்தால் நிச்சயம் தமிழகம் பசுமையாக மாறும் என்றார் .மேலும் எங்களை போன்று கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியில் இடுப்பட வேண்டும் என்றார் .


படங்கள் மற்றும் செய்தி :
முஹம்மத் பிலால் 

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy