அதிரையில் கடல் போல் காட்சியளிக்கும் காதிர் முஹைதீன் பள்ளி மைதானம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் பல நாட்களாக வெயில் வாட்டிவந்த நிலையில் நேற்று இஷா தொழுகைக்கு பிறகு 8:30 மணியளவில் மின்னலுடன் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த கனமழையால் அதிரை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்க்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

8:20 மணியளவில் பெய்ய ஆரம்பித்த இந்த மழை வெகு நேரம் நீடித்ததால் தாழ்வான பகுதிகளான காதிர் முகைதீன் பள்ளி மைதானத்தில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

image

image

image

படங்கள்: அஹன் அஹமது

Close