அதிரையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

அதிரையில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. நேற்று காலையிலும் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல்  இன்று அதிகாலை 4 மணிவரை இடியுடன் கூடிய பலத்த மழை விடாமல் பெய்தது.

5 மணி நேரம் இடைவிடாமல் பெய்த இந்த கனமழையால் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த மணல்கள் மழையோடு மழையாய் அடித்து செல்லப்பட்டது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றது.

Close