சென்னையில் விபத்துக்குள்ளான அதிரையர் மரணம்!

சென்னை 21 மின் மாடர் சிட்டி கதவு எண் 46 ல் குடும்பத்துடன் வசித்து வருபவர் அப்துல் காதர்(40). அதிரை சேர்ந்த இவருடைய தந்தை பெயர் முஹம்மது அலி. இவர் கா.மு.குடும்பத்தை சேர்ந்த பசீர் அவர்களின் மகளை திருமணம் செய்துள்ளார். இவர் கடந்த ஞாயிறு கிழமை அன்று பீச் சாலையில் விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

இவர் உடல் சென்னை வன்மாரப்பேட்டை மார்க்கெட் மையவாடியில் அசர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

image

Close