அதிரை AFCC அணியின் அடுத்த மைல்கல் – மாவட்ட அளவிலான TNCA கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது

11903859_1030969456922007_5949413007864162803_nதஞ்சை மாவட்ட அளவிலான TNCA கிரிக்கெட் தொடர் தஞ்சையில் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாடும் இத்தொடரில் அதிரை AFCC அணியும் விளையாடி வருகிறது. இத்தொடரில் சிறப்பாக ஆடிய நமதூர் அணி பல முன்னனி அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தஞ்சை போலிஸ் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த தஞ்சை அணி 126/10 (25 ஓவர்) ரண்களை குவித்தது.

127 ரண்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய AFCC அணி எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் TNCA தஞ்சை மாவட்ட அளவிலான தொடரில் முதல் முறையாக நுழைந்து அசத்தியது. AFCC அணியின் இளம் வீரர் இப்ராஹிம் (AFCC தீனுல்ஹக் அவர்களின் சகோதரர்) தனது அணிக்காக அதிரடியாக ஆடி 61 ரண்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Reserved police team(Thanjai) 126/10(18.2)
Afcc adirai 127/4 (21.5)
Ibrahim 61*
Mustafa 3 wic
Imran 3 wic
Afcc won the match by 6 wickets..

Close