ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்ட முடியாத தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த கல்லூரி மாணவிகள் லைலா பானு, ஆர்த்தி, வினோதா

ஹெல்மட் பிரச்னைக்கு புதிய தீர்வு : ஜனாதிபதி தட்டிக்கொடுத்த தமிழக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த மாணவிகள்
ஹெல்மட் உயிர்காக்கும் என எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும், பல்வேறு காரணங்களை கூறி வாகன ஓட்டிகள் பலர் அதனை தட்டிக்கழிக்கிறார்கள். இந்த நேரத்தில் ஹெல்மெட் போடாமல் வண்டியையே இயக்க முடியாதபடி புதிய சென்சார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லுாரி மாணவிகள்
டெல்லியில் National Innovation Foundation நடத்திய கண்காட்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தங்கள் கண்டுபிடிப்பை விளக்கி காண்பித்து, அதற்கும் பரிசும் பெற்றிருக்கின்றனர் இவர்கள்.
தமிழகத்து பெண்களின் இந்த கண்டுபிடிப்பை தேசிய அளவில் சிறந்ததாக அறிவித்ததோடு, அதற்கு பரிசும், பாராட்டும் அறிவித்ததோடு மட்டுமின்றி அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் உபகரணத்திற்கு பேடன்ட் உரிமையையும் பெற்றுத் தந்திருக்கிறது மத்திய அரசு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த டி.லைலா பானு, எஸ்.எம்.ஆர்த்தி, எஸ்.வினோதா, ஆகியோர்தான் இந்த சாதனை மாணவிகள். தங்கள் கண்டுபிடிப்பால் தமிழ் மண்ணின் பெருமையை டெல்லியில் நிலை நாட்டிய மாணவிகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பாராட்டு .

image

Close