முத்துப்பேட்டையில் தந்தையின் கணவை நனவாக்க உள்ளூரில் மருத்துவமனை துவங்கிய DR.சதாம் உசேன்

s2முத்துப்பேட்டையில் நேற்று பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை ஒன்றை துவக்கியுள்ளார்கள். தன் கடின உழைப்பால் மிக நல்ல முறையில் படித்து அரசு மருத்துவ கல்லூரியில் பட்டம் வாங்கி அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவராக தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் மருத்துவர் க.சதாம் ஹுசைன். முத்துப்பேட்டை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தந்தையின் கனவை நனவாக்க தந்தையின் முன்னிலையிலும், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையிலும் மருத்துவமனையை துவக்கியுள்ளார். இவரின் இந்த முயற்சி வெற்றி பெறவும் இவர்மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையவும் வல்ல அல்லாஹ் உதவிசெய்வானாக. மேலும் இதுபோல பல மருத்துவர்களும், மற்றும் உயர் பதவி வகிக்கும் வகையில் பலர் உருவாகி முத்துப்பேட்டைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு வல்ல அல்லாஹ் உதவி செய்யவேண்டும்.

Close