அதிரை மார்க்கெட்டில் 45 நாட்களுக்கு பிறகு கொத்துக்கொத்தாக குவிந்த மீன்கள்! (படங்கள் இணைப்பு)


 

தமிழகத்தில்தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 அன்று தொடங்கியது.மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும் வகையில் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15 அன்று தொடங்கியது. 

இந்த தடைக்காலம் கடந்த மே 29 அன்று நீங்கியது. இதனை அடுத்து விசைபடகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று அதிகாலை மல்லிப்பட்டனம், கட்டுமாவடி ஆகிய துறைமுகங்களுக்கு திரும்பினர். 45 நாள் மீன் பிடிக்காமல் முடங்கியிருந்த மீனவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் கொத்து கொத்தாக மீன்கள் வகை வகையாக சிக்கின. எனவே இன்று நமதூர் தக்வா பள்ளி பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று வகை வகையாக குவிந்தன. 45 நாட்கள் நல்ல மீன்கள் சாப்பிட முடியாமல் தவித்த நமதூர் மக்களுக்கு இன்று நல்ல மீன் வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close