2015 ஆம் ஆண்டின் ஷாஜஹான் – இறந்த மனைவிக்காக குட்டி தாஜ்மஹால் கட்டும் ஃபைசல் ஹசன்

small tajmahalஉத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஃபைசல் ஹசன் கத்ரி. ஓய்வு பெற்ற தபால்காரரான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்த தன்னுடைய மனைவியின் நினைவாக தாஜ்மஹாலை போன்று குட்டி தாஜ்மஹாலை கட்டி வருகிறார். 75% சதவீத கட்டிட பணிகளை நிறைவு செய்துள்ள இவர் நிதி பற்றாக்குறையால் இந்த குட்டி தாஜ்மஹாலை முழுமையாக கட்டி முடிக்க முடியாமல் உள்ளார்.

துக்கத்தில் குறட்டை விட்டதற்கெல்லாம் விவாகரத்து வாங்கும் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இவ்வளவு தள்ளாத வயதிலும் இறந்த தன் மனைவியின் நினைவாக தன்னால் இயன்று பொருட்செலவில் குட்டி தாஜ்மஹால் கட்டி வரும் இவர் தான் 2015ம் ஆண்டின் ஷாஜஹான் என நிறுபித்துள்ளார்.

செய்தி தொகுப்பு: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

வீடியோ: தந்தி டிவி

Close