அதிரையில் அணிவகுக்கும் குர்பானி ஆடுகள்

இன்னும் சில வாரங்களில் தியாகத் திருநாளான ஹஜ்ஜு பெருநாளை உலகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் கொண்டாட உள்ளனர். இதனை முன்னிட்டு இஸ்லாமியர்களுல் வசதி படைத்தவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் ஒன்றை இறைவனுக்காக பலி கொடுப்பார்கள். இந்த முறைக்கு குர்பானி எனப்படும். “இப்ராஹிம் நபி அவர்களின் கனவில் அல்லாஹ் அவர்களின் செல்வ புதல்வன் இஸ்மாயில் நபி அவர்களை பலி கொடுக்க கட்டளையிட்ட போது அதனை தந்தையும் மகனும் மனதார ஏற்று அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்த ஆயத்தமாகி கத்தியால் இஸ்மாயில் அவர்களை அறுக்க முற்பட்போது கூற்மையான கத்தி இஸ்மாயில் நபியின் கழுத்தை அறுக்கவில்லை. இதனை அடுத்து அல்லாஹ் அருகில் சென்றுக்கொண்டிருந்த ஒரு கால்நடையை அறுத்து குர்பானி கொடுக்க உத்தரவிட்டான்.” இந்த தியாக சம்பவத்தின் நினைவாகவே நாம் ஹஜ்ஜுப் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் அன்றைய தினம் கால்நடைகளை குர்பானியும் கொடுக்கின்றோம்.

இதற்க்காக கொடுக்கப்படும் குர்பானிக்கான செம்மரி ஆடுகள் அதிரையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.

image

Close