குவைத்தில் பணிபுரியும் சகோதரர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

குவைத்தில் இருந்து அனுப்பும் பணத்திற்கு 5% வரி ஏற்படுத்த குவைத் நாடாளுமன்ற அமைச்சர் திரும்பவும் வலியுறுத்தல்
குவைத்தில் இருந்து இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு 5% வரி வசூலிக்க சட்டத்தில் திருத்தம் செய்து வேண்டும் என்று நேற்று குவைத் நாடாளுமன்றத்தில் MP அப்துல்லா இரண்டாவது முறையாக வலியுறுத்தி உள்ளார்.
குவைத் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுப்பும் பணத்தின் சராசரி கணக்கெடுப்பு படி வெளிநாட்டினர் குவைத்தில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருடத்திற்கு 400 கோடி குவைத் தினார் அனுப்புகிறார்கள்.
இதனால் வங்கிகள் மற்றும் பிற பண பரிமாற்ற அமைப்புகளுக்கு இதற்காக அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும்.குவைத்திகளை போல் வெளிநாட்டினரும் மின்சாரம்,தண்ணீர், உணவு மற்றும் வாகன எரி பொருள் போன்றவைகளில் சலுகைகள் பெறுகிறார்கள். இதனால் இந்த 5% விதிப்பதால் குவைத் அரசின் கஜனாவுக்கு நல்ல தொகை வருமானமாக கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் குவைத்தின் emigration அமைப்பின் இயக்குனர் கமித் -அல் -அன்சாரி இதே கோரிக்கையினை அரசு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Close