பாரதிதாசன் பல்கலைகழக அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்று அதிரை மாணவர் ஹுசைன் சாதனை (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் (2013-2015) ஆம் கல்வியாண்டில் முதுகலை வேதியியல் படித்த மாணவர் காலியார் தெருவை சேர்ந்த பத்ருல் ஜமான் ஆலிம் அவர்களின் மகன் முஹம்மது ஹுசைனுத்தீன் அவர்கள் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வெளியான தேர்வு முடிவில் பல்கலைகழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இவர் ரஹ்மானியா பள்ளி இமாம் உபைதுல் ஜமீல் ஆலிம் அவர்களின் பேரன் ஆவார். ஊருக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்த இவருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

image

image

Close