தமிழ்நாடு… ஒரு சிறிய கண்ணோட்டம்

தென் இந்தியாவின் நுழைவாயில். இந்தியாவின் முதல் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் ஆட்சிமொழியாக உள்ள மாநிலம்.

வரலாறு: திருநெல்வேலி அருகே ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் தமிழகத்தின் வரலாறு என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம் என கணிக்கப்படுகின்றது. பண்டைய காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய வரலாற்றை சங்க இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தின் காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னதாக இருக்கலாம் என்று கருத படுகிறது. இன்றைய தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதிகளை தமிழ் மன்னர்கள் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆண்டு வந்து உள்ளனர். ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், மேச்படோமியர்கள், பெர்ஷியர்களுடன் வாணிபத் தொடர்புகள் இருந்துள்ளன. முத்துக்கள், வாசனைப் பொருட்கள், வைரங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

1336-ல் விஜயநகர பேரரசின் கீழ் தமிழகம் இருந்துள்ளது. அவர்களுக்குப் பிறகு நவாப்கள், நிஜாம்கள் என பலர் கைகளுக்கு மாறி 1801-ல் ஆங்கிலேயர் வசம் சென்றது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்த பகுதிகள் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு சென்னை மாநிலம் ஆனது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்படும்போது சென்னை மாநிலத்தில் இருந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டன. 1969-ம் ஆண்டு சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எல்லைகள்: வடக்கில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்னடகாவையும், தெற்கில் இந்தியப் பெருங்கடலையும், மேற்கில் கேரளா மற்றும் அரபிக் கடலையும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும் எல்லைகளாக கொண்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் தமிழ்நாட்டிற்குள், வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்து உள்ளன.

முதன்மை துறை
• விவசாயம் முதன்மையான தொழிலாகும். 56 சதவீத மக்கள் இத்தொழில் ஈடுபட்டுள்ளனர்.
• காவிரி டெல்டா பகுதி தென் இந்தியாவும் நெற்களஞ்சியம் என்று அழைக்கப் படுகிறது (தஞ்சாவூர் பகுதி).
• வாழை, மரவள்ளி மலர்கள் உற்பத்தியில் முதலிடமும், நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடமும் வகிக்கிறது.
• நெல், கம்பு, சோளம், பயறு வகைகள், பருத்தி, கரும்பு, வாழை, நிலக்கடலை, தேயிலை, காப்பி, ஆகியவை முக்கிய உணவு பயிர்கள்.
• இரும்பு, பாக்சைட், சுண்ணாம்புக் கல் ஜிப்சம், கிரானைட், இல்மனைட், லிக்னைட் ஆகியவை முக்கிய கனிமங்கள் ஆகும்.

இரண்டாம் நிலைத் துறை
o மாநிலத்தின் மொத்த வருமானத்தில் 24 சதவீதம் தொழில் துறையின் மூலம் கிடைக்கிறது. நெசவு தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள், காகித தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழில், நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலையம் போன்றவை குறிப்பிட தகுந்தவை.

மூன்றாம் நிலைத் துறை
• பொங்கல், சித்திரை திருவிழாக்கள், தீபாவளி சிறப்பாக கொண்டாடபடுகிறது.
• பரதநாட்டியம்-உலக புகழ் பெற்ற இக்கலையின் பிறப்பிடம் தமிழகம் ஆகும்.
tn

1. மாநில விலங்கு: வரையாடு
2. மாநில பறவை: மரகத புறா
3. மாநில மலர் : செங்காந்தள்
4. மாநில தினம் : ஏப்ரல் 14

நிலப்பரப்பு: 1,30,058 சதுர கிலோ மீட்டர் (11-வது இடம்)
மக்கள் தொகை: 7,21,38,958 (7-வது இடம்)
கல்வியறிவு : 80.3 சதவிகிதம்
மொழி: தமிழ், ஆங்கிலம்
மாவட்டங்கள் : 32
சட்டசபை இடங்கள்: 234
மக்களவை இடங்கள்: 39
மாநிலங்களவை இடங்கள்: 18
ஆளுநர்: கே.ரோசய்யா
முதல்வர்: ஜெ.ஜெயலலிதா (அ.இ.ஆ.தி.மு.க).

Close