ஆப்பிள் பழத்தின் தன்மைகள்

Apple 'Katy'

வயிற்று புண்ணை குணப்படுத்த கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை தரவல்லதும், கேன்சரை தடுக்க கூடியதுமான ஆப்பிளின் மகத்துவம் குறித்து இன்று நாம் பார்ப்போம்.

அற்புதமான மருத்துவ குணம் கொண்டது ஆப்பிள். கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குழந்தைக்கு எலும்பு வளர்ச்சி, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். எலும்புக்கு பலத்தை கொடுக்கும் தன்மை கொண்ட ஆப்பிள், கேன்சர் செல்களை போக்க கூடியது.ஆப்பிளை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். ஆப்பிள் துண்டுகளுடன் ஒரு ஸ்பூன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து எடுத்துகொள்ள வேண்டும். இதை சாப்பிட்டுவர வயிற்றுப்புண், குடல்புண் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும். மலச்சிக்கல் தீரும். கொழுப்பு கரையும். கேன்சரை தடுக்கும். சாப்பிட்ட உணவு நெஞ்சுக்குழிக்கு வருவதை தடுத்து, புண்களை ஆற்றும்.

ஆப்பிள் தோலை கொண்டு வண்டுகடி, சிராய்ப்பு காயம், பூச்சிக்கடிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஆப்பிள் தோலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இதை தடவினால் பூச்சிக்கடி, சிராய்ப்பு காயம் சரியாகும். பாத வெடிப்புக்கு நல்லது.ஆப்பிளை சாப்பிடும்போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட கூடாது. தோலில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கேன்சர் செல்கள், நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும் தன்மை ஆப்பிள் தோலுக்கு உண்டு.

ஆப்பிள் பழத்தை முகப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். ஆப்பிள் பழத்தை பேஸ்டாக்கி, அதனுடன் 5 சொட்டு தேன், சிறிதளவு பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து அதை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் மறையும். நாட்டு ஆப்பிளாக வாங்க வேண்டும். மெழுகு தடவியிருக்கும் ஆப்பிளை வாங்க கூடாது. அப்படியே வாங்கினாலும் எலுமிச்சை சாறு கலந்த வெந்நீரில் போட்டு மெழுகை நீக்கியபின் சாப்பிட வேண்டும்.

ஆப்பிளை கொண்டு பற்கள், எலும்புகள் பலமாகும் உணவை தயாரிக்கலாம். ஆப்பிள் துண்டுகளை வெந்நீரில் அரைத்து பேஸ்ட் ஆக எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு பால், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இது பற்கள், ஈறுகள், எலும்புகளை பலப்படுத்தும்.ஆப்பிள் இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் தேனீர் தயாரிக்கலாம். ஆப்பிள் இலைகளை அரைத்து அதனுடன் ஆப்பிள் மரப்பட்டையை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும். இதை வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும். பற்கள் ஆரோக்கியம் பெறும். தொண்டை புண் சரியாகும்.

ஆப்பிளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த ஆப்பிள், சோர்ந்துபோன செல்களை புதுப்பிக்கிறது. பெண்களுக்கு எலும்புகள் வலுவின்றி இருக்கும். ஆப்பிள் சாப்பிட்டுவர எலும்புகள் பலமாகும். கெட்ட கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்ட ஆப்பிள், இதய அடைப்பை சரி செய்யும். தொண்டை புண், குடல் புண்களை ஆப்பிள் சரிசெய்யும் தன்மை கொண்டது.

Close