ஆப்பிள் ஐ போன் 6S, ஐ போன் 6S PLUS போன்கள் செப்டம்பர் 9ல் அறிமுகம்

கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக விளங்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம் ஐபோன் எனப்படும் நவீனரக கைபேசி விற்பனையிலும் கொடிகட்டி பறந்து வருகின்றது.

ஏற்கனவே, 6 மற்றும் 6 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் வெளியிட்ட இருரக ஐபோன்களுக்கும் சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி நிலவிவரும் நிலையில், இதன் அடுத்தகட்டமாக ‘iPhone 6S, iPhone 6S Plus’ என்ற இரு நவீன ரக ஐபோன்களை வெளியிடப் போவதாக ஆப்பிள் அறிவித்திருந்தது.

இந்நிலையில், “செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெறும் எங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் விழாவுக்கு வருகை தந்து சிறப்பியுங்கள்” என ஊடகங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அழைப்பு அனுப்பியுள்ளது. இந்த அழைப்பை வைத்துப் பார்க்கும்போது வரும் ஒன்பதாம் தேதி ‘iPhone 6S, iPhone 6S Plus’ ஆகியவற்றை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என நம்பப்படுகிறது.

விரல்ரேகை மூலம் செயல்படும் ஸ்கேனர் மூலம் உயிர்ப்பு பெறும் திரையின் செயல்பாடு, 2-ஜிபி ரேம், இமேஜ் சென்சர்களுடன் கூடிய 12 மெகாபிக்சல் கேமரா, முன்பக்க கேமரா பிளாஷ் என ஏகப்பட்ட புதிய அம்சங்களுடன் அறிமுகமாகவுள்ள ‘iPhone 6S, iPhone 6S Plus’ இரண்டுமே தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் ஒரு புதிய மைல்கல்லாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Close