அதிரை அருகே மினி கடற்கரை?!(படங்கள் இணைப்பு)

அதிரை அருகே சுமார் 5, 6 கிலோ மீட்டர் பரப்பளவில் பள்ளிகொண்டான் முதல் மாளியக்காடு வரை விரிந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரி. கடந்த சில வருடங்களாக பொய்த்துப் போன கனமழையால் வறண்டு பாலை வனம் போல் காட்சியளித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளுத்துவாங்கிய கனமழை காரணமாக இந்த ஏரி முழுவதுமாக நிறைந்துள்ளது. மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.

இதனால் இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதுடன் இதனை கடந்து செல்பவர்களின் கண்களுக்கு அழகாய் விருந்தளிக்கிறது.

கரிச்சமணியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கினா, 100 மீட்டர் தூரத்துல ஆலடி குளத்தையும் நிரப்பலாம். உபரி நீரை 50 மீட்டர் தூரத்துல உள்ள CMP வாய்க்காலிலும் விடலாம். செல்லிக்குறிச்சி ஏரியும் பிளாட் ஆகுமுன்பாக ஆழப்படுத்தப்பட வேண்டும் இதனால் வருட முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதுடன் விவசாயமும் நிலத்தடி நீரும் கணிசமா உயர வாய்ப்புள்ளது.

Advertisement

Close