சென்னை சூப்பர் கிங்ஸ்-பெயர் மாறுகிறது

2013–ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.
லோதா கமிட்டி அளித்த தீர்ப்பு குறித்து ஆராய மற்றும் செயல்படுத்துவது பற்றி ராஜீவ்சுக்லா தலைமையில் 6 பேர் குழுவை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நியமித்தது. இந்த குழுவினர் நேற்று கொல்கத்தாவில் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை இக்குழுவினர் கிரிக்கெட் வாரியத்திடம் அளித்துள்ளனர். அதில் இரண்டு பரிந்துரைகளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக இரண்டு புதிய அணிகளை 2 ஆண்டுகளுக்கு மட்டும் விளையாட வைக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு பிறகு (2018–ல்) சென்னை, ராஜஸ்தான் அணிகளையும் சேர்த்து 10 அணிகளாக விளையாடலாம் என்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் அளித்த பரிந்துரைகள், மற்றும் லோதா கமிட்டி குழு தீர்ப்பு முடிவு எடுக்க இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் இன்று நடக்கிறது.
ராஜீவ் சுக்லா குழு அளித்த பரிந்துரைகள் ஏற்று கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு வீரர்களை அப்படியே வைத்து விளையாட வைக்க ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. அப்படி முடிவு எடுக்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் மாறும்.
இக்கூட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் போட்டி அட்டவணை குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.

Close