வாட்ஸ் அப் புதிய வெர்ஷனில் குவிந்துள்ள அற்புதமான சிறப்பம்சங்கள்

ஒரு மாத சோதனைகளுக்கு பின் வாட்ஸ்ஆப் செயலியின் வி2.12.250 வெர்ஷன் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு சில புதிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது.
தொழில்நுட்பம் : இதெல்லாம் நடந்தால்..?
அதன் படி புதிய அப்டேட் மூலம் அதிகப்படியான எமோஜிக்கள் மற்றும் வாய்ஸ்கால் மேற்கொள்ளும் போது குறைந்த அளவு டேட்டா மட்டும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

1. அன்ரீடு
புதிய அப்டேட் மூலம் நீங்கள் படித்த மெசேஜ்களை படிக்கவில்லை என மாற்ற முடியும். இந்த அம்சம் மூலம் குறுந்தகவல் அனுப்பியவருக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியாது.

2. கஸ்டம் நோட்டிபிகேஷன்கள்
அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கும் புதிய அப்டேட் மூலம் கஸ்டம் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் தனித்தனி ரிங்டோன்களை செட் செய்து கொள்ள முடியும்.

3. ம்யூட்
தற்சமயம் வரை க்ரூப் கான்வர்சேஷன்களை மட்டுமே ம்யூட் செய்ய முடிந்தது, இனி காண்டாக்ட்களுக்கும் இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

4. நேரம்
மேலும் எத்தனை நேரம் ம்யூட் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட முடியும்.

5. டேட்டா
அதிக வாட்ஸ்ஆப் கால் செய்ய வேண்டும் ஆனால் டேட்டா குறைய கூடாதா, அதற்கும் புதிய வழி செய்திருக்கின்றது வாட்ஸ்ஆப்.

6. வாய்ஸ்கால்
வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் மெனுவில் சாட் அன்டு கால் பகுதியின் கீழ் இருக்கும் புதிய அம்சமான லோ டேட்டா யூசேஜ் (Low Data Usage) ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதும்.

7.எமோஜி
புதிய எமோஜிக்கள் வெவ்வேறு நிறம் கொண்டிருக்கின்றது. முகங்களில் பல ரியாக்ஷன் மற்றும் பல புதிய செய்கைகளையும் வழங்கி இருக்கின்றது.

8.கூகுள் டிரைவ்
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் டிரைவ் இன்டகிரேஷன் இம்முறையும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

9.விரைவில்
இந்த அம்சமானது அடுத்த அப்டேட்டில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Close