ஓமன், குவைத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை!

image

ஓமன், குவைத் நாட்டில் இயந்திரங்கள் இயக்குபவர்கள் பணிக்காக திருச்சியில் வரும் 30ம் தேதி நேர்காணல் நடக்கிறது. இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவத்துடன் 22 வயது முதல் 32 வயது வரையுள்ள இயந்திரங்கள் இயக்குபவர்கள் தேவைப்படுகின்றனர்.  இதுபோல் குவைத்  நாட்டில் இந்திய தொலைதொடர்பு திட்டப்பணிகளுக்காக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 வயது முதல் 32 வயது வரையுள்ள கேபிள் அமைக்க பள்ளம் தோண்டும் பணிக்காக 2 வருட அனுபவமுள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். குவைத், இந்திய நாட்டின் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களும் தேவைப்படுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தகுதிக்கு ஏற்ப ஊதியம்,  இலவச விமான டிக்கெட், இருப்பிடம், நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப இதர படி வழங்கப்படும்.

மேலும் விவரங்களை www.omcmanpower.com  என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய  விண்ணப்பம், கல்வி சான்று, நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் வரவேண்டும். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) வரும் 30ம்தேதி காலை 9 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044 2250 2267, 2250 5886, 082206 34389 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Close