திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் நசுருத்தீன், அக்பர் பாதுஷா, சித்திக் அலி ஆகியோர் ஆற்றில் மூழ்கி மரணம்

குளித்தலை காவிாி ஆற்றில் குளித்த திருச்சி ஜமால் கல்லூாி மாணவா்கள் 3 போ் தண்ணீாில் சிக்கி உயிாிழந்த பாிதாபம்.

குளித்தலை சபாபதி நாடாா் தெருவில் உள்ள நண்பா் ஆசிக் (21) இவா் திருச்சி ஜமால் முகமது கல்லூாியில் எம்.ஏ. அரபிக் 2-ம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தனது வீட்டில் விடுதியில் தங்கி ஒன்றாக படித்து வரும் நண்பா்களுக்கு விடுமுறை நாளான இன்று விருந்து வைத்துள்ளாா். விருந்துக்கு வந்த நண்பா்கள் 15 போில் தென்காசியைச் சோ்ந்த அக்பா் பாதுஷா(19), திண்டுக்கல் நஸ்ருதீன்(19) இவா்கள் இருவரும் திருச்சி ஜமால் கல்லூாியில் பி.ஏ. இரண்டாமாண்டு அரபிக் பயின்று வருகின்றனா். இவா்களுடன் எம்.ஏ. இரண்டாமாண்டு படிக்கும் கரூா் பள்ளப்பட்டியைச் சோ்ந்த சித்திக் அலி(21) ஆகியோா் புதை மணலில் சிக்கியதுடன், தண்ணீாின் அளவு வேகமாக சென்று கொண்டிருப்பதாலும் கரையேற முடியாமல் தண்ணீாிலேயே மூச்சு திணறி உயிாிழந்தனா். முசிறி தீயணைப்பு வீரா்கள் வருவதற்கு முன்னரே சக மாணவா்கள் உடலை கரைக்கு கொண்டு வந்து விட்டனா்.
இச்சம்பவம் குறித்து குளித்தலை டி.எஸ்.பி. ஜமீம், இன்ஸ்பெக்டா் குருநாதன், கோட்டாட்சியா் சக்திவேல், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் விசாரணை செய்து வருகின்றனா்.

3 போின் உடல்களும் பிரேத பாிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

image

image

Close