TNCA தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் அதிரை AFCC அணி அதிர்ச்சி தோல்வி!

தஞ்சை மாவட்ட கிளப் அணிகளுக்கு இடையேயான TNCA (தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அதிரை AFCC அணி கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இதில் சிறப்பாக விளையாடிய AFCC அணி பல முன்னனி அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது.

இறுதி போட்டியில் அருன் நெட்ஸ் தஞ்சாவூர் அணியும் அதிரை AFCC அணியும் மோதுகின்றனர். இப்போட்டி இன்று காலை தஞ்சையில் துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற அருண் நெட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கத்திலிருதே நிதானமான ஆட்டத்தை ஆடிய அருண் நெட்ஸ் அணி எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் பத்து ஓவர்களுக்கு 54 ரண்கள் குவித்து வழுவான துவக்க ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த வழுவான ஜோடி அஹமது முஹைதீன் அவர்களின் மாயாஜால சுழல் பந்துவீச்சால் உடைந்தது. இதனை அடுத்து பந்து வீசிய AFCC வீரர் இம்ரான் தன்னுடைய அபாரமான பந்து வீச்சால் எதிர் அணியை நிலை குலைய வைத்தது 4 ஒவர்களையும் 5 பந்துகளையும் வீசி வெறும் 9 ரண்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அது போல் அஹமது முஹைதீன் 6 ஓவர்கள் வீசி 20 ரண்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது போல் வஹா சலீம் அவர்கள் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அருன் நெட்ஸ் அணியினர் AFCC வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக அந்த அணி  28 வது ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரண்களை மட்டுமே குவித்தது.

30 ஓவர்களில் 134 ரண்கள் என்ற எளிய இழக்கை எட்டினால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை AFCC அணி அருண் நெட்ஸ் அணியினரின் அபாரமான பந்து வீச்சால் துவக்கத்தில் இருந்தே ரண் குவிக்க தினரியது. இறுதியாக வெற்றிக்கு 4 ரண்கள் தேவை என்ற நிலையில் ஒரு விக்கெட் மட்டும் மீதமிருந்தது. இந்நிலையில் கடைசி வெக்கெட்டும் விழுந்ததால் அருண் நெட்ஸ் தஞ்சை அணியினர் 4 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

பல தலைசிறந்த அணிகளை வீழ்த்தி மாவட்ட அளவிலான போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற AFCC அணிக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Close