விபத்தில் சிக்கிய த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ்

image

இன்று காலை இராமநாதபுரத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஒரு நிகழ்ச்சிக்கு மகிழுந்தில் ராமநாதபுரம் மாவட்ட ம நே ம க செயலாளர் அன்வர் அலி த மு மு க மாவட்ட பொருளாளர் பாபு இஸ்மாயில் மற்றும் சகோதர்கள் பாக்கர் அலி ருகைப் மற்றும் இப்றாஹீம் ஆகியோர் சென்றுக் கொண்டிருந்தோம்.
காரைக்குடி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருமையம் அருகே எங்கள் மகிழுந்து சென்றுக் கொண்டிருந்த போது எங்களுக்கு முன்பு ஒரு மகிழுந்தும் அதற்கு முன்பு ஒரு சரக்குந்தும் சென்றுக் கொண்டிருந்தன. தீடீரென்று சரக்குந்து நடு சாலையில் நிற்கவே எங்களுக்கு முன்பு சென்ற மகிழுத்து இடது பக்கம் திருப்பி சென்று விட்டது. எங்கள் மகிழுந்து நிற்கவே எதிர்ப்பாரத வகையில் சரக்குந்து பின்பக்கம் நகன்று எங்கள் வாகனத்தில் மோடியது. நாங்கள் ஒலிஎழுப்பானை எழுப்பிய போதும்
எங்கள் வாகனத்தின் முன் பாகத்தை சேதப்படுத்தி சரக்குந்து நின்றது
இறைவனின் மாபெரும் கிருபையால் நாங்கள் அனைவரும் எவ்வித காயமின்றி தப்பினோம்.
சரக்குந்து ஒட்டுநர் குடிபோதையில் இருந்தான் என்பது உபரி தகவல்.
செய்தி அறிந்து நலம் விசாரித்த அனைத்து நல்லுலங்களுக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
எங்கள் பயணம் தொடர்கிறது.

-ஜவாஹிருல்லாஹ் (முகநூல் பக்கம்)

Close