அதிரையில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்!(படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்ட உள்ள அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.இதனையடுத்து அதிரையில் இன்று காலை 7.00 மணியளவில் பேரூராட்சி துணை தலைவர் A.பிச்சை அவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துவங்கி வைத்தார்கள். 

மேலும் இதில் அதிரை கூட்டுறவு துணை தலைவர் முஹம்மத் தமீம் அவர்களும்,கவுன்சிலர் சேனா முனா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இது குறித்து பேரூராட்சி துணை தலைவர் அவர்கள் கூறுகையில்:
அதிரையில் பேருந்து நிலையம் ,அரசு மருத்துவமனை ,கீழத்தெரு சங்கம், கடற்கரை தெரு, காந்தி நகர்,உட்பட மொத்தம் 18 முகாம்கள் அமைக்கபட்டு உள்ளது. இந்த முகாமில் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துமாறு கேட்டு கொண்டார். 

Advertisement

Close