Adirai pirai
sports

கால் டாக்ஸி ட்ரைவராக மாறிய பாகிஸ்த்தான் கிரிக்கெட் வீரரின் சோக கதை

image

பாகிஸ்த்தான் முன்னால் கிக்கெட் வீரர் அர்ஷத் கான் (வயது: 44). பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான அந்த அணிக்காக 58 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 56 விக்கெட்டுகளையும், 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுகளையும், 9 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர் ஒரு கட்டத்தில் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைந்து லாஹூர் பாதுஷா அணிக்காக ஆடினார். ICL தொடரை ஐ.சி.சி. தடை செய்ததுடன் அதில் விளையாடும் வீரர்களையும் ICC நீக்கியது. இதனை அடுத்து இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அனால் தற்போது இவருடைய நிலை மோசமாக உள்ளது. இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் யுபெர் என்னும் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

உலக வாழ்வில் யாருடைய வாழ்க்கை நிலைமை எப்படி மாறும் என்பது தெரியாது. அரசன் ஆண்டியாவான், ஆண்டி அரசனாவான் அது தான் உலகம். இதனை புரிந்து கொண்டு நல்ல நிலைமைக்கு வந்தவுடன் பெருமை, அகம்பாவத்துடன் திரியாமல், வீண்விரையங்கள் இன்றி சேமிப்பாக நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் பிற்காலத்தில் உதவும்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

-கலீஜ் டைம்ஸ்

image