Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

அதிரையர்கள் பலர் பங்கேற்ற பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டைக்கு வந்த வி.சி. கட்சி தலைவர் தொல்.திருமாவளவந் மீது கொலை செய்ய தீர்மானித்து தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், வடசேரி உள்ளிட்ட தலித் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும், ஒரு தடைவைக்கு மேல் குற்றம் செய்தவர்களை ரவுடிகள் பட்டியளில் இணைக்கும் படியும் அப்பகுதிகளை BLACK SPOT ஆக அறிவிக்கக் கோரியும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைக்களை முன்வைத்தும் பட்டுக்கோட்டை அம்பேத்கர் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் IJM மாவட்ட செயலாளர் அதிரை ராஜா, அதிரை நகர த.மு.மு.க நகர செயலாளர் ஷேக், து.செயலாளர் இப்ராஹிம், ம.ம.க.நகர செயலாளர் ஜலால், ஒன்றிய துணை செயலாளர் கங்காதுரை உள்ளிட்ட பல இஸ்லாமிய மற்றும் தலித் அமைப்பினர் கலந்துக்கொண்டனர்.

image

image