அதிரையில் யாரு செத்தா எனக்கென்ன!!

கடந்த 2012 ஆண்டு அதிரை சேர்மன் வாடியில் இரவு நேரத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதாவது வேகமாக வந்த லாரி ஒன்று சேர்மன் வாடி ஸ்டாப்பில் உள்ள மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இதனை அடுத்து மின் கம்பம் குனிந்த நிலையில் வலைந்தது. இது குறித்து அதிரை பிறையில் கடந்த 2012 முதல் பல செய்திகளை பதிந்து இந்த மின்கம்பத்தை மாற்றுமாறு கேட்டுக்கொண்டோம். அதுபோல் மின்வாரியத்துக்கு தொடர்புகொண்டு இது குறித்து தெரியப்படுத்தினோம்.

ஆனால் இவர்கள் கடந்த மூன்றாண்டுகளாக இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செவுடன் காதில் சங்கு ஊதியதுபோல் உள்ளார்கள். இப்பொழுது இப்பகுதியில் சாலை அகலபடுத்துப்பட்டுள்ளதால் இந்த ஆபத்தான மின்கம்பம் சாலையின் குறுக்கே காணப்படுகின்றது.

இதநை கவணிக்காமல் விட்டு விட்டால் என்றாவது ஒரு நாள் பெரிய விபத்து நிகழ வாய்ப்புள்ளது. மூன்றாண்டுகள் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்காத அதிரை மின்சார வரியத்தையும், இதனை தட்டிக்கேட்காத பேரூராட்சி நிர்வாகத்தையும் என்னவென்று சொல்வது.

image

Close