பஸ் விபத்தில் மரணம் அடைந்த அதிரையர் உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

அதிரையிலிருந்து தினசரி வழக்கமாக சென்னை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை புறப்பட்டது. இந்நிலையில் சென்னைக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாய்க்கால் தெரு காசியர் வீட்டை சேர்ந்த  அப்துல் கரீம் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு சென்னை பாலவாக்கம் ஜாமீஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக

மேலும் விபத்தில் சிக்கிய அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோமாக.

Advertisement

Close