Adirai pirai
posts

ஃபிரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்லாத்தை ஏற்றார்!

ஃப்ரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியீட்டாளர் இஸாபெல் மேடிக் (ISABEL MATIC) தனது மன மாற்றத்தைப் பற்றி தனது தளத்தில் கூறியுள்ளார். இனி அதனை பார்போம்.

‘எனக்கு இஸ்லாத்தைப் பற்றி முன்பு எதுவும் தெரியாமல் இருந்தது. முகமது என்பவர் யார் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ள முன்பு எனக்கு அவசியம் ஏற்படவில்லை. சில  நாட்களுக்கு முன்பு ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையும் அதற்கான காரணத்தையும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன்.

ஒரு மனிதருக்கு இவ்வளவு ஆதரவா? அதுவும் ஃப்ரான்ஸில் அவரை கருத்துச் சித்திரமாக வரைவதை இந்த அளவு பிரச்னையாக்குவது ஏன்? அவர் யார்? அவரது வரலாறு என்ன? என்று தேட ஆரம்பித்தேன். முடிவில் இஸ்லாம் என்னை ஈர்த்து விட்டது. இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.’

‘எனது இந்த மன மாற்றத்தை ஜோர்டான் பத்திரிக்கையிலும் பிரசுரித்து இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவிய எனது நண்பர் ஹிஸாமுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

எனது தோழி லைலா அருமையான உணவு பரிமாறி என்னை மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. பலரும் பள்ளி வாசலினுள் என்னை கவுரவித்தனர்.

இஸ்லாத்தின் முதல் தூணான ‘லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்’ ‘இறைவன் ஒருவனே! அந்த இறைவனின் தூதராக முகமது நபி அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்’ என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.

எனது பெயரையும் ஜொஹரா என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்’ என்று மிக மகிழ்வோடு தனது தளத்தில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் சகோதரி இஸாபெல் மேதிக்.

முகமது நபியின் கார்டூனை காரணமாக வைத்து கொலைகளை நடத்தி இஸ்லாத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த யூதர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களின் அந்த நிகழ்வே இஸ்லாம் மேலும் ஃப்ரான்ஸில் வலுவடைய காரணமாகியுள்ளது.

யூதர்களும் சூழ்ச்சி செய்தார்கள்: இறைவனும் சூழ்ச்சி செய்தான்.

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy