துபாய் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் அதிரை அணி!

கடந்த இரண்டு மாதமாக துபாயில் நடந்த விளையாட்டில்  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மற்றும் நமதூரினை சுற்றியுள்ள அதிராம்பட்டினம்,  மதுக்கூர், காயல்பட்டினம்,  கடையநல்லூர்  மற்றும் சென்னை போன்ற பலமிகுந்த 18 அணிகளுடன் மோதியது.

 இரண்டு மாதங்களாக விளையாடி வந்த இந்த அணி  கடந்த வெள்ளிக்கிழமை (09-01-2014)  காலை  நடைபெற்ற  அரைஇறுதி ஆட்டத்தில் ஜெஸ்சி XI அணியை எதிர்கொண்டது.  இந்த போட்டியில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றதால்  இறுதி போட்டியில் அதிராம்பட்டினம் அணியுடன்  விளையாட  தகுதி  பெற்றது.

 நாளை  வெள்ளியன்று (16-01-2015)  காலை  இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அதிரை பாய்ஸ் அணியுடன்  முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close