மக்கா மஸ்ஜிதுல் ஹரம் இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸ் – அறிந்ததும் அறியாததும்

badge7a6883a3a6bf5ad609d6d966daa818758067eb87ஷைக் சுதேசியை பற்றி சில அறியாத தகவல்கள்…..
சுதேசி அவர்களின் முழு பெயர் அப்துர் ரஹ்மான் பின் அப்துல் அஜீஜ் அச்சுதைஸ்.

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் 196௦ ல் பிறந்தார்.

வயது: 55

அன்ஜா என்ற குலத்தை சேர்ந்தவர்.

தன்னுடைய 12 ஆம் வயதில் முழு குர்ஆனை மனனமிட்டார்.

1979 ல் இளங்கலை பட்டம் பெற்றார்.

1983ல் ரியாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஷரியத்திற்கான பட்டய படிப்பை பெற்றார்.

1987ல் முதுகலை பட்டமும் 1995ல் இஸ்லாமிய ஷரியத் சம்பந்தமான டாக்ட்ரேட் (முனைவர்) பட்டம் பெற்றார்.

ரியாத் யுனிவர்சிட்டியிலும், உம்முல் குரா ம் யுனிவர்சிட்டியிலும் உதவி பேராசிரியராக பணியாற்றினார்.

மக்கா ஹரம் ஷரீஃபின் இமாமாக பொறுப்பேற்ற பொழுது அவர் வயது 24 மட்டுமே.

2௦12ல் புனிதமான மக்கா மதினா மஸ்ஜித்களின் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டு அமைச்சர் அந்தஸ்தும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஷைக் சுதைஸ் அவர்கள் சிறு வயதாக இருந்த பொழுது அவரின் தாயார் அல்லாஹ் ஹரமைனின் இமாமாக உன்னை ஆக்குவானாக என அடிக்கடி துஆ செய்வார்களாம்.

தன் தாயாரின் துஆ தான் தான் இந்த நிலைமைக்கு காரணம் என்று அடிக்கடி கூறுவார்
.
அவருக்கு மாத ஊதியம் எவ்வளவு?

இது தொடர்பாக தெளிவான தகவல் கிடைக்க பெறவில்லை.
லண்டனில் இயங்கும் ஹரமைன் டூர்ஸ் பிரைவட் லிமிட்டடின் சி.இ.ஒ தன் முகநூலில் குறிப்பிடுகிறார்:

ஷேய்க் சுதேஸ் அவர்கள் மார்க்க சொற்பொழிவிற்காக வெளிநாடு சென்றிருந்த பொழுது அவருடன் நானும் இருந்தேன். மாநாடு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் இமாமிடம் அவருடைய மாத ஊதியத்தை பற்றி கேட்டார். அவர் பதில் கூறாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். அப்பொழுது அவருடன் வந்த ஒருவர் இமாமத் என்ற பொறுப்பு கண்ணியமானது அதற்காக ஊதியம் நிர்ணயிப்பது அதனுடைய மதிப்பை குறைக்கும் என்ற காரணத்தால் மாதந்தோறும் சவூதி அரசால் அவர்களுக்கு தொகை நிரப்பப் படாத blank cheque வழங்கப்படும். அவர்கள் அந்த மாதத்திற்கு தேவையான தொகையை எடுத்து கொள்வார்கள். என்றார்

இந்த நிகழ்வு இருசாராரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

Close