சென்னை விமான நிலையத்தில் ஹஜ்ஜுக்கு புறப்பட்ட பெண் பயணி மரணம்

DSC05720 copyசென்னையில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கான சிறப்பு விமானம் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணம் செய்ய வந்த அனைவரும் பாதுகாப்பு, சுங்கம், குடியுரிமை ஆகிய சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறினர். இதில், ராயப்பேட்டையை சேர்ந்த இஸ்மாயில், அவரது மனைவி ஜமீலா பேகம் (58) ஆகியோர் விமானத்தில் ஏறியபோது, திடீரென ஜமீலா பேகம், நெஞ்சு வலிப்பதாக கூறி, இஸ்மாயில் மீது சாய்ந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, விமான நிலைய மருத்துவ குழுவினர், அங்கு சென்று மயங்கிக் கிடந்த ஜமீலா பேகத்தை பரிசோதனை செய்தனர். அதில், அவர் மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த விமான நிலைய போலீசார், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதை தொடர்ந்து 348 பயணிகளுடன், விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Close