ஒரு வயதில் 20 கிலோ எடை கொண்ட கொழு கொழு குண்டு குழந்தை!

 அமெரிக்காவின் கொலம்பியாவின் லிபானோ பகுதியை சேர்ந்த சாண்ட்ரா பிராங்கோவின் மகளான ஜுனைட்டா வேலண்ட்டினா ஹெர்னாண்டஸ் என்ற இந்தக் குழந்தை பிறக்கும்போது ஆறு பவுண்டு எடை மட்டுமே இருந்தது. ஆனால் நாளடைவில் எடை கூடிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் 20 கிலோ எடை கூடியது. 

வயதுக்கு மீறிய இரட்டை எடையுடன் வளர்ந்துவரும் தனது மகளின் எதிர்காலம் பற்றி சாண்ட்ரா பிராங்கோவால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இது தொடர்பாக உரிய சிகிச்சை அளித்து மகளின் உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவரும் இவர் ’தற்போது நான் வேலை ஏதும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை செலவுக்கு என் கையில் பணம் இல்லை. அதனால் முழுவீச்சில் சிகிச்சை அளிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Advertisement

Close