அரபு நாடுகளில் வசிக்கும் சகோதரர்களுக்கி ஒரு முக்கிய அறிவிப்பு!

அரபு தேசத்தில் வாழும் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!
மக்களே குளிருக்கு இதமாக ஹீட்டர் போட்டு உறங்கும் பழக்கம் இருந்தால், தயவுசெய்து தூங்கும் முன்பு ஆஃப் பண்ணிவிட்டு தூங்குங்கள். சவுதி அரேபியா ரியாத் ஒலயா பகுதியில் வீட்டு டிரைவர் பணிசெய்யும் ஒரு சகோதரர் ஜூம்ஆ’விற்கு பிறகு ஹீட்டர் போட்டு உறங்கி உள்ளார், ஹீட்டரின் அனலின் காரணமாக காற்று அதிக சூடாகி சுவாசிக்க முடியாமல் இறந்துவிட்டார்.
அவருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு தான் திருமணம் முடிந்ததாம். கைக்குழந்தை ஒன்றும் உள்ளதாம். சகோதரர்களே இப்பொழுது குளிர் அதிகம் உள்ளது. ஹீட்டர் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருங்கள்..!
உங்களுடைய நண்பர்கள்,சொந்தங்கள் இருந்தாலும் சொல்லுங்கள். இறைவன் பாதுக்காத்தருள்வானாக!
வெளிநாட்டில் கஷ்ட படும் நம் சொந்தங்களின் நம் நண்பர்களின் உயிர் காக்க!

Advertisement

Close