முத்துப்பேட்டையில் அசம்பாவிதத்தை தடுக்க விநாயகர் சிலை ஊர்வல பாதையை மாற்ற TNTJ கோரிக்கை

image

முத்துப்பேட்டையில் இந்தாண்டு விநாயகர் சிலை ஊர்வல பாதையை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை 1 பொதுக் குழு கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முகமது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாலிக், துணை தலைவர் மிஸ்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முத்துப்பேட்டையில் ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப் படிபாதை மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்த உத்தரவில் உள்ள பின் பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எனவே அதனை அமல்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக ஊர்வலத்தில் நடந்து வரும் கலவரங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஊர்வலத்தின் பாதையை மாற்றம் செய்து அருகில் உள்ள கந்தப்பரிச்சான் ஆறு அல்லது கோரையாற்றில் சிலைகளை கரைக்க கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னர் புதிய நிர்வாகிகள், வாக்கொடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தவ்ஹீத் ஜமாத் கிளை 1 தலைவராக முகமது அலி ஜின்னா, செயலாளராக புகாரி, பொருளாளராக சுகைப்கான், துணை தலைவராக யூசுப், துணை செயலாளராக சாகுல் ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போல் மருத்துவ அணி தலைவராக முகமது தவ்பீக், மாணவரணி தலைவராக சல்மான் கான், செய்தி தொடர்பாளராக சஜாத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்ட னர்.

Close