அதிரையில் மிக சிறப்பாக நடந்து முடிந்த “இளம் இஸ்லாமியன்” போட்டி!

அதிரையில் பள்ளி மாணவர்களுக்காக நமதூரில் பொது சிந்தனை கொண்ட இளைஞர்கள் சார்பில் “இளம் இஸ்லாமியன்” என்னும் ஒரு மார்க்க அறிவு போட்டி  இன்று 14ஆம் தேதி ஏ. எல் மெட்ரிக் பள்ளியில் நடைப்பெற்றது. 

இதில் பங்குபெற்ற மாணவர்களை இரண்டு பிரிவாக அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு உலமாக்களின் கண்காணிப்பில் நடைபெற்றது. இந்த தேர்வில் அதிரையின் அனைத்து பகுதி சிறுவர்களும் கலந்துக்கொண்டனர்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் உலமாக்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியுடன் வரும் 17-01-2015 (சனிக்கிழமை) மாலை 4:30 மணியளவில் நடைபெறும். இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.Advertisement

Close