பரபரப்பாக காணப்படும் அதிரை பேருந்து நிலையம்!(படங்கள் இணைப்பு)

பொங்கலை முன்னிட்டு அதிரை பேருந்து நிலையம் ,பெரிய மீன் மார்க்கெட் போன்ற பகுதிகள் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டு வருகிறது .மேலும் அதிரை பேருந்து நிலையத்தில் கரும்பு வியாபாரம் சூடுப்பிடித்து உள்ளது .ஒரு கட்டு கரும்பு விலை ₹ 180 முதல் ₹ 250 வரை விற்கப்படுகிறது. மண் அடுப்பு, மண் பானை விற்பனையும் பரபரப்பாக நடக்கிறது.

மேலும் அதிரை பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறா விதத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் உள்ளனர். வாகனங்களையும் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.மேலும் அதிரையில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் :

மக்களுக்கு தேவையான பாதுக்காப்பை காவல் துறையினர் வழங்கி வருகின்றனர் .மேலும் யாரேனும் குற்ற செயலில் இடுப்பட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றார்.  Advertisement

Close