2014-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது பெற்ற வீரர்கள்

2014-ம் ஆண்டுக்கான சிறந்த 11 கால்பந்து வீரர்களை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியி்ட்டுள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான (2014) சிறந்த வீரருக்கான விருது சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் இன்று வழங்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்களின் பெயரை பிபா வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கோல்கீப்பராக ஜெர்மனியின் மானுயல் நியூர் தேர்வு செய்யப்பட்டள்ளார். 

தவிர, சிறந்த முன்கள வீரர்களாக அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆர்கன் ராபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த தடுப்பு ஆட்டகாரர்களாக பிலிப் லாம், டேவிட் லூயிஸ், செர்ஜியோ ராமோஸ், தியாகோ சில்வா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நடுக்கள வீரர்களாக ஆண்டிரஸ் இனியஸ்தா, டோனி கிராஸ், ஏஞ்சல் டி மரியா ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது போர்ச்சுகல் வீரர் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.  அவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close