அதிரையை விட்டு பிரியா விடை பெற்றார் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் காவல் துறை ஆய்வாளராக பணியாற்றியவர் ரவிச்சந்திரன். தனது நேர்மையான பணியாலும், அனைத்து தரப்பு மக்களிடம் கொண்ட நல்ல பழக்க வழக்கங்களாலும் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்.
இவர் தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில் துணை ஆய்வாளர்  திருமதி.பசுபதி, ஜீவானந்தம், சுந்தர், பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், S.P.சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இதில் அதிரை பிறை செய்தியாளர் காலித் மற்றும் பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.

Advertisement

Close