துபாய் அதிகளவில் இஸ்லாத்திற்கு மாறும் பெண்கள்!

துபாயில் சென்ற ஆண்டு மட்டும் 2,906 நபர்கள் இஸ்லாத்திற்க்கு மாறியுள்ளனர்!

துபாய், உலக அளவில் அதிக தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் சுற்றுல்லா துறையில் மிகச் சிறந்த இடமாகவும், வான் உயர்ந்த கட்டிடங்களையும் கொண்ட பிரம்மாண்டமான, பரபரப்பான நகரம்.

இங்கு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் குவிந்து வருவதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு சென்று பணி புரிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான தொழில் நகரத்தில் கலாச்சார சீரழிவுகளும் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன.

ஆனால் சென்ற 2014ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் இங்கு 2906 நபர் புனித இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுள்ளனர். இதில் வெளிநாடுகளில் இருந்து பணி புரிய வந்து இஸ்லாத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மதம் மாறியவர்களின் எண்ணிக்கை 91. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றவர்களுல் 2047 பெண்களும் 768 ஆண்களும் அடங்குவர். மேலும் கடந்த ஆண்டு கேமரூன் என்ற ஒரு கால்பந்து அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பயிற்ச்சியாளர்களும் இஸ்லாத்தை தழுவியது பலரை மெய் சிலிர்க்க வைத்தது.

இது கடந்த 2013ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் 546 நபர்கள் அதிகமாக இவ்வாண்டு இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

1996ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை துபாயில் மட்டும் 17,704 பேர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுள்ளனர்.  இதில் 65% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து துபாய் ” Islamic Affairs and Charitable Activities in Dubai (IACAD)” இயக்குனர் DR.உமர் காத்திப் அவர்கள் கூறுகையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுள் பெண்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை சட்டங்களையும், நெறிமுறைகளையும் போதிப்பதற்க்கு IACAD சார்பாக ஒரு தனி குழு ஒன்றும் அமைக்கப்படுவதாகவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும் IACAD அமைப்பின் NEW MUSLIMS துறை தலைமை அதிகாரி ஹுதா அல்காபி தெரிவித்துள்ளார்.

தொகுப்பு: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Advertisement

Close