அதிரையில் சேர்மன் வாடி மின்கம்பம் மீது பேருந்து மோதியது

image

அதிரை சேர்மன் வாடியில் மின்கம்பம் கடந்த மூன்று ஆண்டுகளாக கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பம் குறித்து பல்வேறு பதிவுகள் பதிந்துள்ளோம். இந்நிலையில் இன்று அந்த பேருந்து நிறுத்தத்தில் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த ஒரு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு புறப்படும் போது பயங்கர சத்தத்துடன் அந்த பேருந்து ஆபத்தான மின்கம்பத்தில் அந்த பேருந்து மோதியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

எத்தனை முறை சொன்னாலும் கண்டுக்கொள்ளாமல் இவ்வளவு அலெட்சியம் காட்டும் மின்சார வாரியத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து அந்த பேருந்தில் பயணித்த பயணி மின்வாரியத்திடம் விசாரித்ததில் அந்த சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விரைவில் மாற்றப்படும் என தெரிவித்தார்.

Close