முஸ்லிமாக மாறிய நடிகை ரஹிமா (மோனிகா)திருமணம் நடந்தது!

முஸ்லிம் மதத்துக்கு மாறிய நடிகை மோனிகா திருமணம் சென்னையில் இன்று நடந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் மோனிகா திடீரென முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் ரகீமா என மாற்றிக் கொண்டார். மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். மோனிகா–மாலிக் திருமணம் நந்தம்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மோனிகா அறிவித்துள்ளார்.Advertisement

Close