துல்ஹஜ் பிறை தென்படவில்லை – TNTJ அறிவிப்பு

image

தவ்ஹீத் ஜமாஅத்
பிறை எங்கும் தென்படவில்லை!!!
துல்கஃதா மாதம் 30ஆக பூர்த்தி செய்யப்படுகின்றது!!!
தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
பிறைதேட வேண்டிய நாளான இன்று 14.09.15 திங்கள் கிழமை மஹரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 15.09.15 செவ்வாய்க்கிழமை மஹரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்

Close