அதிரையை செழிப்பாக்க ஒரு அருமையான ஐடியா!! ஊர் தலைவர், மக்களின் கவனத்திற்கு!!!

image

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ராஜமடம் ஏரில் இருந்து வெளியேறும் தண்ணீர் கல்லூரி சாலை வழியாக செப்படா தெருவழியாக போய் கடலில் தான் வீணாக கலக்கின்றன ,அதுபோல நசுநீ ஆரின் நீர் கருங்குளம் வழியாக கடலில் தான் வீணாக கலக்கின்றன .
வீணாகபோய் கடலில் கலக்கும் நீரை முறையாக ஆக்கபூர்வமான (scheme ) ஒன்றை அதிரை சேர்மன் ,சமூக ஆர்வலர்கள் ,ஊர் பிரமுகர்கள் ,மற்றும்தொழில் அதிபர்கள் கலந்து எந்த, எந்த அணுகுமுறையை நீர்வள அமைச்சகத்திடம் கொண்டு சென்றால் வீணாக கடலில் கலக்கும் நீரை ஊரில் உள்ள குளங்களுக்கு ராச்சஸ பைப்புகளை அமைத்து நிரப்ப ஆக்கபூர்வமான ,நடைமுறைக்கு சாத்தியமான வழிகளை சிந்தித்து முயற்சி மேற்கொள்ளலாம்
கரிச்சமணிகுளத்திற்கு எதிரே உள்ள சுடுகாடுவை ஒட்டிய வயல்காடு ஓரமாக ஆட்ரின் ஓரமாக உள்ள ஒத்தையடி பாதை வழியாக ராச்சஸ பைப்புகளை அமைத்து கரிச்சமணி குளத்தோடு இணைத்தால் அங்கிருந்து ராச்சஸ பைப்புகளால் வெள்ளைகுளம் ,ஆலடிக்குளம், செக்கடிகுளம் ,மண்ணப்பன்குளம் , பிள்ளை குளம் ,அம்பட்டன்குளம் இத்தனை குளங்களுக்கும் வீணாக ஆறில் போய் கலக்கும் நீரை கொண்டு பலன் அடையலாம்,
இதுபோல ராஜமடம் ஏரியில் இருந்து வெளியேறும் நீரை அந்த அந்த குளங்களுக்கு அருகாமையில் நீர் வரும் வழித்தடங்களில் ராச்சஸ பைப்புகளை அமைத்து செடியன்குளம் ,மிஸ்கீன் பள்ளிகுளம் ,கடல் கரைதெரு குளம், தரகர்தெரு குளம் ,தர்கா பின் புறம் உள்ள குளம் இவைகளில் நீரை கொண்டு வந்து பலன் அடையலாம் , அரசியல் சப்போர்ட்டும் , ஊர் மக்களின் ஒத்துழைப்பும் ,கடின முயற்சியும் சரியான கோணத்தில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்வரும் காலங்களில் அதிகபட்ச தண்ணீர் பிரச்சினையை முடிந்த அளவிற்கு சரி செய்யலாம் ,
உங்கள் நலனில் தொப்புல்கொடி உறவில் ஒருவனான
-Anwardeen MA

Close