இஸ்லாம் மதத்துக்கு மாற போவதாக ப்ராமணர்கள் மிரட்டல்

image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சிலர், மதம் மாறி விடுவோம் என்று போலீசாரை மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்பத் மாவட்டத்திலுள்ள சிங்காவலி ஆகிர் கிராமத்தில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 8-ம் தேதி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக போலீசாரிடம் புகாரளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் நேற்று மாஜிஸ்திரேட் அலுவலகம் முன்பாக திரண்ட பிராமணர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்னைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறி விடுவோம் என்று கோஷமிட்டனர்.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கூடுதல் சூப்பிரெண்டு வித்யா சாகர் மிஸ்ரா, இன்று அந்த சிங்காவலி கிராமத்தைச் சேர்ந்த 150 பிராமணர்கள் தன்னை சந்தித்து தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கண்டுபிடிக்காவிட்டால் இஸ்லாம் மதத்திற்கு மாறி விடுவதாக மிரட்டியதாகவும், வழக்கை விரைந்து முடிக்க தனக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Close