மருந்துகளை மறந்து வந்த பயணி! விமானத்தை தரை இறக்கிய மனிதநேய விமானி யூசுஃப்!

மரு12038012_887393004647629_8533484461217481366_nந்து மாத்திரைகளை மறந்து வந்த பயணிக்காக விமானத்தை மீண்டும் தரை இறக்கி மனித நேயத்திற்கு புதிய வராலாற்றை எழுதிய முஸ்லிம்  விமானி “யுசுப் சேர்” சவுதி அரேபியாவின் ஹைல் நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்   ஒன்றை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி யுசுப் சேர்  தரை இறக்கினார்

விமானத்தில் பயணம் செய்த 17 வயது இளைஞர்  ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் உட்கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை  மறதியாக ஹைல் நகரில் விட்டு வந்து விட்டதாலும்  அவர் குறிப்பிட்ட நேரத்தில் அந்த மருந்துகளை உட்கொள்ளவில்லை என்றால் அவரது உயிருக்கே அபாயம்  இருப்பதாக விமானி யுசுப் சேர்க்கு சொல்லப்பட்டதும்  அவர் சிறிதும் யோசிக்காமால் உடனடியாக விமானத்தை புறபட்ட இடத்திற்கே திருப்பி கொண்டு வந்து இறக்கினார்.

இதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு அவர்  உதவியுள்ளார். இதனால் 50 நிமிடங்கள் விமான பயணம் தாமதமானாலும் பயணிகள் அனைவர்களும் அதை  இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டனர்.

50 நிமிடங்களை விட ஒரு உயிரை காப்பாற்றுவது  முக்கியம் என்றும் அதற்காக தாங்கள் மகழ்வதாகவும்  விமனத்தில் பயணித்த பயணிகள் அனைவர்களும்  கருத்து தெரிவித்தனர்.

இதர்கிடையே விமானி யுசுப் சேர் அவர்களின் மனித  நேய பணியை பாராட்டி இது போன்ற பணிகளை  ஊக்குவிப்பதற்காக விமானி யுசுப் சேர் அவர்களுக்கு  பாராட்டு பத்திரமும் ஊக்க தொகையும் வழங்கி  அவரை கவுரவிக்கப் போவதாக விமான நிறுவனம்  அறிவித்துள்ளது.

Close