மக்காவில் ஹஜ் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து!

file-17-1442503640871562100சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயமடைந்ததை அடுத்து புனித யாத்திரை சென்ற ஆயிரம் ஆசிய பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. ஓட்டலின் 8வது தளத்தில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டு காயம் அடைந்த 2 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை இந்த வருடத்திற்கான ஹஜ் பயணம் தொடங்கியதை அடுத்து இதுவரை 10 லட்சத்திற்கும் கூடுதலானோர் மெக்கா நகருக்கு சென்று சேர்ந்துள்ளனர். ஓட்டலின் பெயர், பயணிகளின் நாடு மற்றும் தீ விபத்திற்கான காரணம் ஆகியவற்றை குறித்த தகவலை அந்த அமைப்பு வெளியிடவில்லை. வருடந்தோறும் நடக்கும் மிக பெரிய நிகழ்ச்சி ஹஜ் பயணம்.

இஸ்லாமின் 5 தூண்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு இஸ்லாமியரும் குறைந்தது ஒரு முறையாவது மெக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்ள எதிர்பார்ப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளில் துயர சம்பவங்கள் ஏதும் நடந்திடாத நிலையில் கடந்த வெள்ளி கிழமை மெக்காவின் பெரிய மசூதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட கிரேன் சரிந்து விழுந்ததில் ஆசிய நாட்டினர் சிலர் உட்பட குறைந்தது 107 பேர் பலியானார்கள்.

Close