முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தை முறைப்படுத்த கோரி திருச்சி மத்திய மண்டல ஐஜி IG யை சந்தித்த PFI அமைப்பினர்.!!

12002276_1683776451859994_5441380410867812929_nபாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மத்திய மண்டல IG அவர்களை சந்தித்து. தஞ்சை மண்டல தலைவர் S.அமீர் பாஷா அவர்கள் தலைமையில் முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் சம்மந்தமான மனு கொடுக்கப்பட்டு.

இதில் திருவாரூர் மாவட்ட தலைவர் பைசல் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் S.அபூபக்கர் சித்திக், திருச்சி மாவட்ட தலைவர் A.முகம்மது சித்திக், மாவட்ட செயலாளர் V.முஜிபுர் ரஹ்மான் பட்டுக்கோட்டை டிவிஷன் தலைவர் வழக்கறிஞர் நிஜாம் அவர்களும் ஆகியோர் மண்டல காவல்துறை தலைவர் அவர்களை சந்தித்து முத்துப்பேட்டையில் நடக்கவிருக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்க்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கக்கோரியும், ஊர்வலத்திற்க்கு வரும் வெளியூர் நபர்களை தடுக்ககோரியும், மாலை 06:00 மணிக்குள் பாமனி ஆற்றில் சிலையை கரைக்ககோரியும் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பெற்றுக்கொண்டு பரிசிலினை செய்வதாக கூறினார்.

Close